ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் பிலியந்தலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் மொரட்டுவ பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்களிடம் இருந்து 01 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
10 கிராம் ஹெராயின் வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.