Tuesday, September 10, 2024

Latest Posts

எம்.பி பதவியை இராஜினாமா செய்த தலதா அத்துகோரள

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான தலதா அத்துகோரள இன்று (21) தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

இவர் 2004 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவராக இருந்த காமினி அத்துகோரளவின் சகோதரி ஆவார். காமினி அத்துகோரளவின் மரணத்திற்குப் பின்னர் அவர் அரசியலில் பிரவேசித்தார்.

அவர் 2004, 2010, 2015 மற்றும் 2020 தேர்தல்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் வெற்றி பெற்றார்.

விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு குழுக்களாகப் பிரிந்துள்ளமையால் மனசாட்சிப்படி செயற்படுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.