ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக யாழ்.மாவட்ட அமைப்பாளர் விக்டர் ஸ்டான்லி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரச்சார செயலாளர் யூ. எல். எம். என். முபீன் மற்றும் ஸ்ரீ டெலோ அமைப்பின் தலைவர் பரராஜசிங்கம் உதயராசா ஆகியோர் இணைந்துள்ளனர்.
நாட்டில் மீண்டும் வரிசையில் நிற்கும் சகாப்தம் ஏற்படக்கூடாது என்றும், பல்வேறு கட்சிகள் நடத்தும் பேரணிகளை பின்பற்றக்கூடாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.