புதிய அரசியல் கூட்டணி குறித்து அநுர யாப்பா கருத்து

Date:

புதிய அரசியல்  கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் இந்த நாட்களில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு விடை காண்பது முன்னெப்போதையும் விட இன்று இன்றியமையாததாக மாறியுள்ளதாகவும், குழுவாக கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், புதிய அரசியல் இயக்கத்தை கூட்டணியாக கருதுவது ஏற்புடையது அல்ல என்று கூறிய அவர், இந்த புதிய அரசியல் இயக்கத்திற்காக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

பல்வேறு வெளியாட்களுடனும் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவித்த அவர், எதிர்கால அரசியல் பயணம் குறித்து அங்கு கலந்துரையாடி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடிக்கு பொதுஜன பெரமுனவின் அனைத்து உறுப்பினர்களும் பொறுப்புக் கூறுவதாகவும், அந்த பொறுப்பை ஏற்று அனைத்து பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

குறி தவறிய துப்பாக்கிச் சூடு

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும்...

தபால் கட்டணம் உயர்வு

தபால் துறை நாளை (09) முதல் தபால் கட்டணங்களை உயர்த்த நடவடிக்கை...

மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை...

டில்வின் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப்...