தமிழ் மொழி உரிமை பாதுகாப்பு – சகலருக்கும் சார்பான புதிய அரசமைப்பு – தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு அநுர உரை 

Date:

தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவதுடன் அரச நிர்வாகத்தில் தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வி எழுப்பும்போது அவருக்கு தமிழ் மொழியில் பதிலளிப்பதைக் கட்டாயமாக்குவோம் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று திங்கட்கிழமை கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

தேர்தல் விஞ்ஞாபனத்தை மத தலைவர்களுக்கு அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய பின்னர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்குப் பதிலாக மாற்று முறைமையைச் செயற்படுத்துவோம். அனைத்து மக்களுக்கும் சார்பான வகையில் புதிய அரசமைப்பை உருவாக்குவோம்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்டவாட்சி கோட்பாட்டை செயல் வடிவில் அமுல்படுத்துவோம்.

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்காக 2015 -2019 வரையான காலப்பகுதியில் முன்னெடுத்த செயற்பாடுகளை முடிவுறுத்தி, அனைத்து இன மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் வகையிலான புதிய அரசமைப்பை உருவாக்குவோம்.

தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம். அரச நிர்வாகத்தில் தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வி எழுப்பும்போது அவருக்குத் தமிழ் மொழியில் பதிலளிப்பதைக் கட்டாயமாக்குவோம்.

அத்தியாவசிய உணவு பொருட்களை இறக்குமதி செய்து உண்ணும் நிலைமை மாற்றம் பெற வேண்டும். தேசிய உணவு உற்பத்தி மேம்பாட்டு திட்டத்தைக் கட்டம் கட்டடமாகச் செயற்படுத்துவோம்.

பொருளாதார முன்னேற்றத்தின் பிரதி பலனை நியாயமான முறையில் பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிப்போம். நடுத்தர மக்களை ஏழ்மையில் வைத்துக்கொண்டு நாட்டை முன்னேற்ற முடியாது.

பாடசாலை கல்விக் கட்டமைப்பை மறுசீரமைப்போம். உணவு, கல்வி, சுகாதாரம் என்பவற்றுக்கான வற் வரியை நீக்குவோம். நீர் மற்றும் மின்சாரக் கட்டணத்தையும் குறைப்போம்.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...