வட கிழக்கில் துரித அபிவிருத்தி – சஜித் பிரேமதாச

Date:

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டு பலமான அபிவிருத்தி திட்டங்களுக்காக நாட்டை முன்னெடுத்துச் செல்வதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்த உடனே வட கிழக்கை மையமாகக் கொண்ட சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டி, அதன் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுத்து அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி, அரசியல் உரிமையை வலுப்படுத்துவதோடு, ஒரே நாட்டுக்குள் அதிகாரம் பகிரப்பட்டு, இதுவரை இல்லாமல் போயிருந்த மாகாண சபை உறுப்புரிமையும் பெற்றுத் தருவோம். அதற்காக குறுகிய காலத்துக்குள் மாகாண சபை தேர்தல் நடத்துவோம். அதிகாரம் இழந்து காணப்படுகின்ற மாகாண சபைகளுக்கு தொடர்ந்து அதிகாரத்தை வழங்குவதோடு, இந்த அதிகாரங்களை மீண்டும் கைப்பற்றி கொள்வதற்கு இடமளிக்க போவதில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்தோடு வட மாகாணத்தின் அபிவிருத்தி பணிகள் மிகவும் கீழ் மட்டத்திலே காணப்படுகின்றது. எந்தவொரு அபிவிருத்தியும் இடம்பெறவில்லை. தொழிற்சாலைகள் உருவாக்கப்படாமல் தொழில் வாய்ப்புகள் இல்லாத போயிருக்கின்றது. கல்வியிலும் சுகாதாரத்திலும் குறைபாடுகள் காணப்படுகின்றது. எனவே யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சி மாவட்டத்திலும் தொகுதி வாரியாக உற்பத்தித் தொழிற்ச்சாலைகள் உருவாக்க நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்ப மையங்கள் உருவாக்கப்படுவதோடு, தொழில் முனைவர்கள் 10 இலட்சம் பேரையும் உருவாக்குவோம். அதன் ஊடாக மாவட்டத்தில் இருக்கின்ற இளைஞர்களால் புதிய தொழில் முனைவர்களாக இணைந்து கொண்டு, உற்பத்தி கொள்ளளவின் மூலம் தேசிய உற்பத்திக்கு பங்களிப்பை வழங்க முடியும்.

யுத்தத்தினால் வறுமை அதிகரித்து காணப்படுவதோடு இந்த வறுமை தொடர்ந்து நீடிக்க கூடாது. வறுமையில் இருந்து மீட்சி பெறுவதற்காக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 24 மாதங்களுக்கு தலா 20,000 ரூபா வீதம் வழங்குவதன் ஊடாக வறுமையை ஒழிக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...