ஐக்கிய மக்கள் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ராஜகிரிய ஃபோர்டேகொட விவேகராம புராண விகாரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.
இந்த நிகழ்வில் அவரது மனைவி ஜலனி பிரேமதாசவும் கலந்துகொண்டதுடன் மேலும் பல ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
தனது வாக்கினை அளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, ஜனநாயகத்தை பாதுகாத்து சமாதானம், நட்புறவு மற்றும் ஒற்றுமையுடன் செயற்படுவது அனைவரினதும் கடமையும் பொறுப்பும் ஆகும்.