இரு விமானங்கள் ரத்து, பயணிகள் சிரமம்

0
213

நேபாளத்தின் காத்மாண்டு மற்றும் இந்தியாவின் மும்பைக்கு புறப்பட வேண்டிய இரண்டு விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த இரண்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று (01) காலை 8.20 மணியளவில் 200 பயணிகளுடன் நேபாளத்தின் காத்மாண்டு நோக்கிப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 181, பல மணிநேரம் தாமதமாகியதையடுத்து, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்ட மற்றொரு விமானமும் இன்று காலை மும்பைக்கு புறப்பட இருந்தது.

விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக பயணிகளை ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here