எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பொது மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ரவி கருணாநாயக்கவை நியமிக்க பலமானவர்கள் குழுவொன்று செயற்பட்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் வெற்றிப்பாதைக்கு தள்ள ரவி போன்ற நல்ல அமைப்பு பலம் கொண்ட பலமான செயலாளர் நாயகம் தேவை என பலரது அபிப்பிராயம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கிளை அமைப்புக்கள் பலவும் இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் கட்சியினருக்காக எப்போதும் துணை நிற்கும் ரவி, கட்சி உறுப்பினர்களால் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளக்கூடிய நெருக்கமான நபர் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கு அவர்கள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற, கட்சியின் உள்நாட்டு வெளிநாட்டு உறவுகளை உரிய முறையில் பேணக்கூடிய ரவி கருணாநாயக்கவே பொருத்தமானவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்டர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.