நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் ; சிஐடி விசாரணைக்கு பணிப்பு

0
154

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா தமது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறிய சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா அனைத்து நீதித்துறை பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரிடம் தமது ராஜினாமா கடித்தையும் கடந்த 23ஆம் திகதி சமர்ப்பித்திருந்தார்.

தாம் வழங்கிய சில தீர்ப்புகளைத் தொடர்ந்து தனக்குக் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறியே டி.சரவணராஜா நீதித்துறை பதவிகளில் இருந்த விலகுவதாக குறித்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், சர்வதேச ரீதியாக இலங்கைக்கு பெரும் இழுக்கையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான பின்புலத்திலேயே இந்த விடயம் தொடர்பிலான உடனடி சிஐடி விசாரணைக்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here