ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 17 வருடங்களின் பின்னர் பதக்கம் வென்ற இலங்கை!

0
213

2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நதீஷா தில்ஹானி லேகம்கே இலங்கைக்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.

ஈட்டி எறிதல் போட்டியில் அவர் இந்த பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.

சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் நதீஷா தில்ஹானி லேகம்கே 61.57 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இவ்வாறு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

2006 இல் சுசந்திகா ஜயசிங்க வெற்றி பெற்றதன் பின்னர் 17 வருடங்களின் பின்னர் தடகளப் போட்டியில் இலங்கை பதக்கம் வென்றது இதுவே முதல் முறையாகும்.

இதேவேளை, ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தையும் சீனா வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here