தொடர்ந்தும் சர்வதேச கண்காணிப்பு வளையத்திற்குள் இலங்கை

0
39

இலங்கையைத் தொடர்ந்தும் சர்வதேசத்தின் கண்காணிப்பில் வைத்திருக்கும் வகையிலான பிரேரணை ஒன்றை நிறைவேற்றுமாறு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை, சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

அதன் ஆசியப் பிராந்திய பிரதி பணிப்பாளர் மீனாக்சி கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தை அவர் தெரித்துள்ளார்.

இலங்கையில் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றுள்ளார்.

அவர் கடந்தகால ஜனாதிபதிகள் புரிந்த தவறுகளைச் சரி செய்ய வேண்டும்.

இலங்கையில், தண்டனைகளிலிருந்து விடுபட்டுக் கொள்ளுதல், பாதிக்கப்பட்டவர்களும், சாட்சியாளர்களும் அச்சுறுத்தப்படுதல், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் இலக்கு வைக்கப்படுதல் போன்ற நிலைமைகள் இன்னும் தொடர்கின்றன.

இந்த நிலையில் இலங்கையை எதிர்வரும் 2 ஆண்டுகளுக்குச் சர்வதேசத்தின் கண்காணிப்பில் வைத்துக் கொள்வதற்கான பிரேரணை கட்டாயமாகும்.

இந்த பிரேரணை, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகளைக் கண்காணித்து சர்வதேசம் அறிக்கைப்படுத்தும் வகையிலும், எதிர்கால வழக்கீடு நடவடிக்கைகளுக்காக ஆதாரங்களைத் திரட்டவும் இயலும் வகையில் அமைக்கப்பட வேண்டும்.

அதன் ஊடாக, சர்வதேச குற்றங்களை இழைத்தவர்களுக்கு என்றாவது ஒருநாள் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்திய பிரதி பணிப்பாளர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here