உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிப்பு

0
142

எரிவாயு விலை அதிகரிப்பு காரணமாக தேநீர் விலை 10 ரூபாவினாலும், கொத்து விலை 20 ரூபாவினாலும், சோற்றுப் பொதி விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவி  த்துள்ளது.

எரிவாயு அதிகரிப்பு மாத்திரமன்றி மின்கட்டண அதிகரிப்பு மற்றும் அரிசியின் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார்.

“நேற்று மீண்டும் எரிவாயு விலை அதிகரித்தது. நாங்கள் மூன்று மாதங்களாக எதையும் உயர்த்தவில்லை. ஆனால் நாளை முதல் அதிகரிக்கப்படும். கீரி சம்பா இல்லாததால் அரிசி 50 ரூபாவில் அதிகரித்துள்ளது. சந்தையில் கீரி சம்பா இல்லை. குடிநீர் கட்டணம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே விலையில் கீரி சம்பாவை சந்தைக்கு கொடுத்தால் அரிசி விலையை குறைக்கலாம். மின்கட்டணம் அதிகரித்தால் மீண்டும் விலை உயர்த்தப்படும். அமைச்சர் நளீன் பெர்னாண்டோவை அரிசி மாஃபியாவை நிறுத்துமாறு கூறுகிறார். அரிசி வியாபாரிகளால் விலைவாசியை கட்டுப்படுத்தினால் அரசு தேவையில்லை. அமைச்சர் கோழி இறைச்சி விலையை குறைத்தால் அந்த பலன் மக்களுக்கு கிடைக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here