Saturday, November 9, 2024

Latest Posts

வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை உயர்வு

ஏனைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் செப்டெம்பர் மாதத்தில் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுப் பயணங்கள் இதுவரை 10% அதிகரித்துள்ளதாக பணியகம் கூறுகிறது.

2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28,344 இலங்கையர்கள் வெளிநாட்டில் வேலைக்காகச் சென்றதாகவும், 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் வெளிநாடுகளில் வேலைக்காகச் சென்றவர்களின் எண்ணிக்கை 25,716 ஆகவும் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 240,109 இலங்கையர்கள் வெளிநாட்டில் பணிபுரிய சென்றுள்ளனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.