ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்ட பணிகளை தேர்தல் முடிவடைந்தவுடன் அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்; பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில ஒருசிலர் கருத்துக்களை குறிப்பிடுவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான அடிப்படையற்ற கருத்துக்களுக்கு அவதானம் செலுத்தாமல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானங்கள் மீது நம்பிக்கை வைத்து செயற்படுமாறு பொதுமக்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இடைநிறுத்தப்பட்டுள்ள 2024/2025 பெரும்போகத்திற்கான உரம் வழங்குதல் மற்றும் மீனவர்களுக்கான நிவாரணத் திட்டங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
செப்டம்பர் மாத நிலுவைத் தொகையுடன் ஒக்டோபர் மாதத்தில் அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியத்தை வழங்குவது தொடர்பில் ஆட்சேபனை இல்லை என ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.