கணினி குற்றத்தடுப்பு பிரிவினரால் ஜோதிடர் இந்திக்க தொடவத்த இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் அவர் பேசியதாக குற்றம் சுமத்தப்பட்ட ஜோதிடர் இந்திக்க தொடவத்த கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் தொடவத்த கருத்துகளை வெளியிட்டதாக சில முஸ்லிம் அமைப்புகள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.