நீதிபதி சரவணராஜாவிற்கு ஆதரவாக யாழில் போராட்டம்

0
163

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுக்கும் முகமாக கவனயீர்ப்பொன்று இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவகத்தின் முன்பாக காலை 10 மணியளவில் குறித்த கவனயீர்ப்பு இடம்பெற்றது.

இலங்கை அரசே சட்டவாட்சியை பாதுகாக்க நீதித்துறைச் சுதந்திரத்தை உறுதி செய்ய வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டத்தரணிகள், மனித உரிமைகள் ஆர்வலர்கள், சிவில் சமூகத்தினர்,பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here