பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மூவருக்கு பதவி உயர்வு

0
135

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலின்படி, மூன்று  பிரதி பொலிஸ் மா அதிபர்கள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம் இந்த உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி வருண ஜயசுந்தர, குற்றப் பிரிவுக்கு பொறுப்பான அசங்க கரவி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்ட மாவட்டங்களுக்குப் பொறுப்பான மகேஷ் சேனாரத்ன ஆகியோர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்வு  பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 27ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபர் பதவி உயர்வுகளை வழங்கியுள்ளார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here