இனிமேல் தனது புகைப்படத்தை கட்அவுட்கள் மற்றும் சுவரொட்டிகளில் வைக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அனைத்து அரசியல் தலைவர்களும் சுவரொட்டிகள் அனைத்திலும் புகைப்படங்களை வைப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, கட்அவுட் மற்றும் கோஷ அரசியலில் இருந்து விலகி மக்களின் தேவைகளுக்காக அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து தங்களை அர்ப்பணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தின் 149வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி இன்று (08) இதனைத் தெரிவித்தார்.