Saturday, July 27, 2024

Latest Posts

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார் ; தமிழ் கட்சிகளை சந்திப்பாரா?

‘IORA’ மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார்.

‘IORA’ மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்துள்ளார்.

‘IORA’ அமைப்பின் 2023-2025 காலப்பகுதிக்கான தலைமை பதவியை இலங்கை வகிப்பதால் இம்முறை ‘IORA’ மாநாடு இலங்கையில் இடம்பெறுகிறது.

‘IORA’ (Indian Ocean Rim Association) எனப்படுவது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள 23 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்ளும் மாநாடாகும்.

மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் நேற்று இலங்கை வந்தடைந்துள்ளார்.

‘IORA’ அமைப்பின் 2023-2025 காலப்பகுதிக்கான தலைமை பதவியை இலங்கை வகிப்பதால் இம்முறை ‘IORA’ மாநாடு இலங்கையில் இடம்பெறுகிறது.

கடந்த ஆண்டு மாநாடு பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்றது.

இலங்கையில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்துவரும் பின்புலத்தில் ‘IORA’ மாநாடு இலங்கையில் நடைபெற உள்ளது. இது சர்வதேச ரீதியில் பெரும் அவதானம் மிக்க மாநாடாக மாறியுள்ளது.

பிராந்தியத்தில் பலம் வாய்ந்த நாடான இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் பங்கேற்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களுடன் எஸ்.ஜெய்சங்கர் சந்திப்புகளை நடத்தவும் உள்ளார்.

அரசாங்கத்தின் சீன சார்பு கொள்கை காரணமாக இந்தியா சில அரசியல் நெருக்கடிகளை இலங்கைக்கு கொடுத்துவருகிறது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய இருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் ராஜ் நாத் சிங்கின் இலங்கை பயணம் ஒத்திவைக்கப்பட்ட இந்திய வெளியுறவு செயலகம் அறிவித்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் இலங்கையில் ‘IORA’ மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

இதேவேளை, எஸ்.ஜெய்சங்கர் திருகோணமலைக்கும் செல்ல உள்ளார். இங்கு இந்திய நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள சில திட்டங்களை அவர் பயனாளிகளுக்கு கையளிக்க உள்ளார்.

திருகோணமலையில் இந்தியா முன்னெடுக்கவுள்ள ஏனையத் திட்டங்கள் குறித்தும் அவர் ஆய்வுகளை நடத்துவார் என அறிய முடிகிறது.

எஸ்.ஜெய்சங்கரை சந்திக்க தமிழ் கட்சிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. என்றாலும் அதற்கான அனுமதி இன்னமும் கிடைக்கவில்லை.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.