Thursday, September 19, 2024

Latest Posts

நாட்டை அழித்த ராஜபக்ஷ குடும்பத்திற்கு தொடர்ந்தும் உயர் பதவி – சஜித் குற்றச்சாட்டு

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஆபிரிக்காவின் ருவாண்டாவில் நடந்த பாரியதொரு பழங்குடிப் போர் காரணமாக கிட்டத்தட்ட ஒரு மில்லியன் உயிர்கள் பலியாகினாலும், இன்று ருவாண்டா ஆபிரிக்காவின் புதிய சிங்கப்பூர் என்று அழைக்கப்படுகிறது.

ஏனென்றால், முறையான திட்டத்துடன் நாட்டின் தேவைகளின் அடிப்படையில் சரியான நேரத்தில் முடிவுகள் எடுக்கப்படுகின்றமையினாலாகும்.

குறுகிய கட்டமைப்பிற்குள் மட்டுப்படுத்தப்படாமல் புதிதாக திட்டமிடுவதன் மூலம் ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ருவாண்டா அவ்வாறு தீர்மானங்களை மேற்கொண்டாலும், எமது நாட்டில் யுத்தம் நிறைவடைந்து ஏறக்குறைய 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இன்னமும் இனவாதம் மற்றும் மதவாதத்தின் அடிப்படையில் நாட்டை அழிக்கும் திட்டத்திற்கு ராஜபக்ச குடும்பம் நாட்டை இட்டுச் சென்றது எனவும், அவ்வாறு வக்குரோத்தடையச் செய்த ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நாமல் குமரருக்கு நாட்டைக் கட்டியெழுப்பும் குழுவொன்றிற்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் என சகலரையும் அவர்கள் சிரமத்திற்குள்ளாக்கினர் எனவும், அடுத்த போகத்திற்குத் தேவையான உரங்களைக் வழங்குவதற்குக் கூட முடியாத நிலை உள்ளதாகவும், இதுவரை 3 போகங்கள் தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வரும் நிலைக்கு விவசாயிகளை தள்ளிவிட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

முதன் முறையாக மனித உரிமைகள் பேரவை கூட நமது நாட்டில் பொருளாதார உரிமைகள் அழிக்கப்படுவது குறித்து விவாதிக்கிறது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், சமூகத்தின் மிகச்சிறிய அலகிலுள்ள தனிமனிதன் முதல் தொழில் வல்லுநர்கள், அரச ஊழியர்கள் உட்பட அனைவரினதும் பொருளாதாரத்தையும் ராஜபக்சர்கள் அழித்தனர் எனவும், இதன் காரணமாக, மக்களின் போதிய உணவு மற்றும் கல்விக்கான உரிமைகள் கூட மீறப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெஹியத்தகண்டியில் இடம்பெற்ற தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.