இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களுக்காக 690 அணிகள் போட்டியிடவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
74 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஏதேனும் அநீதி நடந்துள்ளதாக உணர்ந்தால் அந்த குழுக்கள் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று (11) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது.
வேட்புமனுக்கள் அங்கீகரிக்கப்பட்ட குழுக்களின் வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கங்கள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
மொத்தம் 764 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் 74 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும், எதிர்வரும் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களுக்காக 690 அணிகள் போட்டியிடுகின்றன. நிராகரிக்கப்பட்ட எந்தவொரு குழுவும் நீதிமன்றத்திற்குச் சென்று தனது வேட்புமனுவை நிராகரிப்பு தொடர்பான உத்தரவைப் பெறலாம். இன்று அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரி சுயேச்சைக் குழுக்களுக்கு உரிய அடையாளங்களை வழங்கினார். திகாமடுல்ல தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. அவற்றில் 64 உள்ளன. மேலும் பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் மிகக் குறைந்த அளவாகும். இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் 15 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன.
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று (11) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.