Friday, January 17, 2025

Latest Posts

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் பதவிக்காலம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிப்பு

IGP சி.டி.விக்கிரமரத்னவின் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் சி.டி.விக்ரமரத்னவின் பொலிஸ் மா அதிபர் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் இதற்கு முன்னர் இரண்டு முறை, தலா 03 மாதங்கள் என்ற அடிப்படையில் நீடிக்கப்பட்டது. இதனை அரசியலமைப்பு சபையும் அங்கீகரித்திருந்தது.

இந்நிலையில், புதிய பொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படும்வரை சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் 3 வார கால நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அரசியலமைப்பு சபையின் ஒப்புதல் தேவையில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.