இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சர்வதேச கிரிக்கெட் நடுவருமான குமார தர்மசேன மற்றும் அவரது மனைவியுடன் 12 பணிப்பாளர்களை கைது செய்யுமாறு நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் நிறுவனமொன்றின் முகாமைத்துவப் பணிப்பாளரினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
குமார தர்மசேன, அவரது மனைவி மற்றும் 12 பேர் கொண்ட பணிப்பாளர்கள் குழு நாரஹேன்பிட்டி பகுதியில் உள்ள தனியார் வீடொன்றிற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை துப்பாக்கிகளை காட்டி மிரட்டியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.