தல்துவ இரட்டை கொலை சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி

0
154
Shooting from a pistol. Reloading the gun. The man is aiming at the target

அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், பொலிஸ் கான்ஸ்டபிளைக் கையில் வைத்திருந்த கைவிலங்கினால் கழுத்தை நெரிக்க முயற்சித்துள்ளதாக அவிசாவளை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரை சுட்டுக் கொன்று இருவரை படுகாயப்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய இளைஞன், சம்பவம் தொடர்பான வழக்குப் பொருட்களை காட்டுவதற்காகச் அழைத்துச் சென்ற போது இவ்வாறு செயற்பட்டுள்ளார்.

பொலிஸ் குழுவில் பயணித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் கைவிலங்கு அகற்றப்பட்டது.

பொலிஸ் அதிகாரிகளின் கழுத்தை நெரித்துவிட்டு ஓட முயன்றபோது சுட்டுக் கொன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் கான்ஸ்டபிளும் ஆபத்தான நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவிசாவளை தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவிசாவளை, மணிங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த மகேஷ் தனஞ்சய என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலை இடம்பெற்ற தினம் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் இவரே எனத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here