பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றம் தேவை – நீதி அமைச்சர்

0
115

பாராளுமன்ற தேர்தல் முறைமையில் திருத்தம் செய்வதற்கான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக நீதித்துறை சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

160 உறுப்பினர்களை ஒற்றை ஆசன முறையிலும் எஞ்சிய 65 உறுப்பினர்களை விகிதாசார முறையிலும் தெரிவு செய்வதற்கான பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்ததாக அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

ஒற்றை மற்றும் விகிதாசார வாக்களிப்பு முறையின் கலவையுடன் தற்போதுள்ள வாக்களிப்பு முறையை திருத்துவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான பாராளுமன்றக் குழுவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை தாம் முன்வைத்துள்ளதாக அமைச்சர் கூறுகிறார்.

பாராளுமன்ற தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் எதிர்காலத்தில் கலந்துரையாடி அதனை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர எதிர்பார்ப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here