நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

Date:

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும்.

மேல், தென், வட மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் காலையிலும் மழை பெய்யக்கூடும்.

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடல் பகுதிகளில்
மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடல் நிலை:
நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகள் சாதாரணமான அலைகளை கொண்டிருக்கும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக் கூடும் என்பதோடு, அப்பகுதிகளில் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிச்சயமற்ற நிலையில் மாகாண சபைத் தேர்தல்..

முரண்பட்ட காலக்கெடு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக, வாக்காளர்கள் மற்றும் கட்சிகள்...

பிரதமர் ஹரிணி இந்தியா பயணம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில்...

மனுஷவுக்கு பிணை!

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு...

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம்...