அரசியலமைப்பின் பிரகாரம் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் நேற்று (21) உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்களில் நடைபெற்றது.