அமைச்சரவை மாற்றங்கள் மூலம் பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியாது

0
193

கூட்டமைப்பு அரசியல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளங்கிக்கொள்ள வேண்டும் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களை மாற்றுவது தொடர்பில் பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.

அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்கவோ அல்லது மக்களுக்கு நிவாரணம் வழங்கவோ 2030 வரை காத்திருக்க முடியாது என குறிப்பிட்டார்.

மேலும் நடைபெற்றது அமைச்சரவை மாற்றம் அல்ல, பதவி மாற்றம் மாத்திரமே எனவும் குறிப்பிட்டார்.

அமைச்சரவை மாற்றங்கள் மூலம் பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கூட்டணிகட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுகட்சிகள் மத்தியில் அமைதியை பேணவேண்டும் எனவும் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இரண்டு தலைவர்களும் வெவ்வேறு திசையில் சென்றனர் இதனால் நாடு ஸ்திரமின்மைக்குள் தள்ளப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தீர்மானங்களை எடுக்கும்போது ஜனாதிபதி கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசிக்கவேண்டும் என அவருக்கு ஆலோசனை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையி;ல் மாற்றத்தை மேற்கொள்வதற்கான உரிமை ஜனாதிபதிக்குள்ளது அதேவேளை இது குறித்து கூட்டணியில் உள்ள சக கட்சிகளுடன் பேசவேண்டிய கடப்பாடு ஜனாதிபதிக்குள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here