சீனாவின் Shi Yan 6 ஆய்வுக் கப்பல் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 11 ஆம் திகதி சீனாவில் இருந்து பயணத்தை ஆரம்பித்த Shi Yan 6 ஆய்வுக் கப்பல் நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Shi Yan 6 கப்பலுடன் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ருகுணு பல்கலைக்கழகம் அதிலிருந்து விலகியது.
இந்த பின்னணியில், கப்பலின் வருகையை அடுத்த மாத இறுதி வரை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனை வெளிவிவகார அமைச்சும் உறுதிப்படுத்தியது.
எவ்வாறாயினும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு அருகில், இந்து சமுத்திரத்தில் ஆய்வு அல்லது கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த Shi Yan 6 கப்பல் நேற்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பலின் வருகை தொடர்பாக இந்தியா தொடர்ச்சியாக கண்காணித்து வந்த நிலையில், கப்பல் வருகைக்கு எதிர்ப்பினையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.