யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த உலக வங்கிக் குழு

Date:

இலங்கை வந்துள்ள உலக வங்கிக் குழு, இன்று (30) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளது.

இதனொரு அங்கமாக உலக வங்கியின் நிதியுதவியில் நடைபெறும் வேலைத்திட்டத்தை பார்வையிட கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு உலக வங்கி குழு விஜயம் செய்து பார்வையிட்டது.

உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜியர்ட் தலைமையிலான குழுவினரே விஜயம் செய்தனர்.

இதன்போது உலக வங்கியின் உயர் மட்ட குழு, வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் உள்ளிட்ட பலரும் குறித்த விஜயத்தின் போது கலந்துகொண்டனர்.

நாளை (31) ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள பலதரப்பு நிதி நிறுவனங்களுக்கிடையிலான வட்டமேசை கலந்துரையாடலில் இவர்கள் பங்கேற்க உள்ளனர்.

உலக வங்கியின் உதவியின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை கண்காணிப்பதும் இந்த விஜயத்தின் மற்றுமொரு நோக்கமாகும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...

டிஜிட்டல் சேவைகள் 18% பெறுமதி சேர் வரிக்கு சஜித் எதிர்ப்பு

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18%...

விமலுக்கு CID அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை...