திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடு!

0
232

திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளம், வறட்சி உள்ளிட்ட காரணங்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்கும் நிகழ்வு நேற்று (02) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதிதாக விவசாய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து கொண்ட விவசாயிகளுக்கான பற்றுச்சீட்டும் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 736 விவசாயிகளுக்கான 22.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 47 விவசாயிகளுக்கான காசோலை இன்று வழங்கப்பட்டதுடன் மீதமாகவுள்ள விவசாயிகளின் நட்ட ஈட்டு கொடுப்பனவு அவர்களின் வங்கி கணக்கின் வரவில் வைப்பில் இடப்பட்டுள்ளது என கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை உதவி பணிப்பாளர் கே.எல்.அன்சார் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.சுதாகரன், கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையின் உத்தியோகத்தர்கள் , விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here