பிக் போஸ் வீட்டு குளியலறையில் நடந்த பிரச்சனையின்போது யாழ், அழகி ஜனனி செய்த காரியம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டது.
வார இறுதி நாட்களில் உலக நாயகன் கமல் ஹாசன் வந்தால் பிக் போஸ் போட்டியாளர்கள் மிகவும் சாந்தமாக மாறிவிடுவார்கள்.
அதனாலோ என்னவோ இன்றே இஷ்டத்துக்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
முதல் வீடிோவில் அசீமும், மகேஸ்வரியும் மோதினார்கள். இதையடுத்தும் சண்டை பற்றி தான் வீடியோ வந்திருக்கிறது.
குளியலறையில் ஒரு துண்டுக்காக ஜனனி மற்றும் குவின்ஸி இடையே பிரச்சனை ஏற்படுகிறது.
கோபத்தில் ஒரு பொருளை தூக்கிப் போட்டு உடைத்துவிட்டார் ஜனனி.
பின்னர் குவின்ஸியிடம் மன்னிப்பு கேட்டு கண் கலங்கினார் ஜனனி. திடீர் என்று குவின்ஸியின் காலை தொட்டு மன்னிப்பும் கேட்டார்.
ஒரு துண்டை எடுத்ததற்கு ஒரு சண்டை. அதற்கு ஒரு வீடியோவா பிக் போஸ். நீங்கள் எல்லாம் நல்லா வருவீங்க. ஜனனி சண்டையை பார்த்தால் ஏதோ சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்தது போன்று இருக்கிறதே என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
போதும் ஜனனி நிறுத்திக்கோங்க. உங்க டிராமா ஓவராக போய்க் கொண்டிருக்கிறது என்று பிக் போஸ் பார்வையாளர்கள் கிண்டல் செய்கிறார்கள்.