நாட்டை அழித்தவர்களிடம் ஆட்சியை மீண்டும் ஒப்படைத்து ஏமாற வேண்டாம்

Date:

நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால், பொருளாதாரம் விரிவாக்கப்பட வேண்டும். தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை சுருக்கி வருகிறது. பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட்டு, போலியான புள்ளி விபரங்களையும் தரவுகளையும் முன்வைத்து மூன்றாவது தடவையாகவும் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொருளாதாரத்தை சுருக்கி ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எனவே உழைப்பு யுகத்தை, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி யுகத்தை உருவாக்கி சோம்பல்தனம் இல்லாமல் பணியாற்ற அனைவரும் தயாராக வேண்டும் என்றும் உலகில் முதல் தரமாக இருக்க வெற்றுப்பேச்சுக்கள் பேசாமல் செயலாற்ற வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நிரந்தர மானியங்கள் வழங்கப்படாது என்றாலும் எழுந்து நிற்கத் தேவையான சகல பக்க பலத்தையும் வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வில்கமுவ, உடுவெல ஸ்ரீ தர்ம விஜய பௌத்த நிலையத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

“மூச்சு” மற்றும் “பிரபஞ்சம்” போன்ற திட்டங்களை செயல்படுத்தும் போது ஐக்கிய மக்கள் சக்தி பகிர்ந்தளிக்கும் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளதாக குற்றம் சாட்டப்படுவதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியினால் பகிர்ந்தளிக்கப்பட்ட மருந்துகள், கணனிகள், பஸ் வண்டிகள் என்பன பெரும் பணக்காரர்கள் மற்றும் பெரும் கோடீஸ்வரர்களுக்கு வழங்கப்படாது நாட்டின் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும், சாதாரண மக்களுக்குமே அவை சென்று சேர்ந்ததாகவும், இதுவே முக்கியமான விடயம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

திருட்டு மற்றும் மோசடி மூலம் நாட்டின் வளங்களை உற்ற நண்பர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் பகிர்ந்தளிப்பதை விட அப்பாவி ஏழை மக்களுக்கு ஏதாவது பகிர்ந்தளிப்பது பெறுமதியானது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்நாட்டில் வரி செலுத்துவோரின் பணத்தைச் சேகரித்து அபிவிருத்தித் திட்டங்களுக்குச் செலுத்துவது உண்மையான அபிவிருத்தியல்ல என்றும், வரிப்பணமின்றி வேறு வழிகளில் நாட்டில் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதே உண்மையான அபிவிருத்தி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

டொலர் பற்றாக்குறைக்கும் ரூபாவின் பற்றாக்குறைக்கும் தீர்வு காணாது நாட்டையே அழிவின் விளிம்பிற்கு கொண்டு சென்ற சக்திகளை, மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்து ஏமாற வேண்டாம் என்றும், டொலர் தட்டுப்பாடு, ரூபா தட்டுப்பாடு என்ற இரண்டு நிதிப் பிரச்சினைகளைத் தீர்க்க, சரியான அணி எது என்பதை மக்கள் புத்திசாலித்தனமாக முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எல்ல பஸ் விபத்து – சாரதி கைது

நேற்று இரவு எல்ல-வெல்லவாய சாலையில் நடந்த பயங்கர விபத்து, வெல்லவாய நோக்கிச்...

இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி

இந்தியாவிற்குள் அகதிகளாக நுழைந்த இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவின் தங்க மத்திய...

நாட்டை சோகத்தில் தள்ளிய எல்ல விபத்து

எல்ல - வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று (05)...

எம்பிக்களுக்கான மேலும் ஒரு சலுகை ரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள...