வட மாகாணத்தில் 401 புதிய அதிபர்கள் நியமனம்

0
151

அதிபர் தரத்திற்கு ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 401 புதிய அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (04 ஒக்டோபர்) யாழ்ப்பாணம் கோப்பாயில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் வழங்கி வைக்கப்பட்டன.

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் பங்கேற்றார்.

வட மாகாணத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கு இவர்கள் அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று வழங்கப்பட்ட புதிய நியமனங்களுடன் வட மாகாண பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் என வட மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here