கொத்து, ரைஸ் உள்ளிட்ட உணவுகள் விலை அதிகரிப்பு

0
231

இன்று (04) நள்ளிரவு முதல் பல வகையான உணவு வகைகளின் விலைகளை உயர்த்த அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

சீனியின் விலை அதிகரிப்பு காரணமாக தேனீர் விலை 5 ரூபாவினாலும் பால் தேனீர் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், அரிசி, மரக்கறிகள், கோழி இறைச்சி, வெங்காயம் போன்றவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக சோறு பொதி ஒன்றின் விலை 20 ரூபாவினாலும், கொத்து மற்றும் பொரித்த சோறு விலை 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here