இலங்கை கிரிக்கெட் சபைக்கு பொலிஸ் பாதுகாப்பு

0
154

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அதிகாரிகளுக்கு எதிராக வலுபெற்றுள்ள போராட்டங்கள் காரணமாக கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் வளாகத்தை சுற்றி இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இன்று காலை இந்தப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய குழு, கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அதிகாரிகளிடம் மனுவொன்றையும் கையளித்தது.

இலங்கை அணி அண்மைக்காலமாக பங்குபற்றிய போட்டிகளில் படுதோல்விகளை சந்தித்த வருகிறது. இந்தியாவுடன் நடைபெற்ற போட்டியில் 55 ஓட்டங்களை மாத்திரமே இலங்கை அணியால் பெற்றுக்கொள்ள முடிந்தது.

இந்தத் தோல்வியால் கிரிக்கெட் ரசிகர்கள் அணி மீது கடும் அதிருப்தியை அடைந்துள்ளனர். அத்துடன், அணியின் முன்னாள் வீரர்களும் தேர்வாளர்கள் உட்பட கட்டுப்பாட்டுச் சபைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளர் மொஹான் டி சில்வா நேற்று தமது பதவியை இராஜினாமா செய்திருந்தார். அத்துடன், சில அதிகாரிகளும் பதவி விலகியிருந்தனர்.

அதன் பிரகாரம் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுண ரணதுங்க தலைமையில் இடைகால நிர்வாக குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவால் வெளியிடப்பட்டுள்ள பின்புலத்திலேயே கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here