அமெரிக்காவின் ஆட்சி மாற்றம் – இலங்கைக்கு பாதிப்பா?

0
165

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் புதிய நியமனம்  இலங்கையை எவ்வாறு பாதிக்கும் என நிபுணர் அரசியல் ஆய்வாளர் கலாநிதி தயான் ஜயதிலக்க கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய தலைமை  இலங்கையின் ஆட்சியை சற்று வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்க்கும் சாத்தியம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முன்னைய நிலைமையை விட சிக்கலான நிலைமை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பின் வருகையின் ஊடாக அமெரிக்காவிற்கும் உலக நாடுகளுக்கும் இடையிலான உறவு மாற்றமடையும்.

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கு இடையில் இருந்த உறவு இருந்தததனை விடவும் நெருக்கடியாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாகும்.

அத்துடன் ட்ரம்ப் ஜனாதிபதியாகியதன் ஊடாக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பனிப்போர் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here