தேர்தலில் போட்டியிடும்11 வேட்பாளர்கள் கைது – 353 ஆதரவாளர்களும் சிக்கினர்  

0
116

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தமை, சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளைக் காட்சிப்படுத்தியமை, சந்தேகநபர்களை விடுவிப்பதற்காகப்  பொலிஸ் நிலையங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

இதவேளை, தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் வேட்பாளர்களின் 353 ஆதரவாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here