இங்கிலாந்துக்கு 169 வெற்றி இலக்கு, கோலி, பாண்ட்யா அரைச்சதம்

Date:

டி20 உலக கோப்பையின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றனர். இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணி தொடக்கமே சொதப்பலாக இருந்தது. முதல் பந்தில் கேஎல் ராகுல் பவுண்டரி அடித்தாலும் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி- ரோகித் சர்மா ஜோடி நிதானமாக ஆடினர். பவர் பிளேயில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 38 ஓட்டங்கள் மட்டுமே அடித்திருந்தது.

தடுமாற்றத்துடன் ஆடிய ரோகித் சர்மா 28 பந்துகளில் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய சூர்ய குமார் யாதவ் 14 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்ததாக விராட் கோலி – பாண்ட்யா ஜோடி அதிரடியாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர்.

சிறப்பாக விளையாடிய விராட் கோலி அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய பாண்ட்யா 29 பந்தில் அரை சதம் அடித்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் எடுத்தது. கடைசி 5 ஓவரில் 68 ஓட்டங்களை இந்திய அணி குவித்தது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை திருத்தம் இல்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை...

ரம்புக்கனையில் மண்சரிவு

ரம்புக்கனை, கங்கைகும்பூர பகுதியில் இன்று (01) பாரிய மண்சரிவு ஒன்று பதிவாகியுள்ளதாக...

அனர்த்த மீட்பு உலங்குவானூர்தி விபத்து

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212...

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு

சமீபத்திய கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட சேதமடைந்த சாலைகள், பாலங்கள் மற்றும் பாதுகாப்பற்ற...