ரணில் அரசு விரைவில் கவிழ்ந்தே தீரும் – அடித்துக் கூறுகின்றார் சஜித்

Date:

ஊழல், மோசடிகளைப் பாதுகாத்து வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு கவிழ்ந்தே தீரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அதற்கான நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆளும் தரப்பில் இருந்துகொண்டு மக்கள் நலன் கருதிச் சிந்திப்பவர்கள் தாமதிக்காமல் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்க்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (09) ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று அரசியலிலும் ஊழல், மோசடி. விளையாட்டிலும் ஊழல், மோசடி. அரசின் நாளாந்த நடவடிக்கைகளிலும் ஊழல், மோசடி. இவை அனைத்துக்கும் முடிவுகட்ட ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி வெகுவிரைவில் ஆட்சிப்பீடம் ஏறும்.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...

விளையாட்டு அமைச்சின் பெயரில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெயரில் மோசடி

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் பெயரை தவறாக பயன்படுத்தி, வெளிநாட்டு வேலை...

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...