பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் திகதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார்.
மேலும் ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல் வெளியேறினார். கடந்த வாரம் ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டார்.
இதில் தற்போது 17 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 33-வது நாட்களை நெருங்கியுள்ளது. பிக்பாஸ் சீசன் 6 இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் இந்த வார போட்டிகளில் சிறப்பாக பங்கேற்காத ஒரு நபரை தேர்வு செய்ய சொல்லி பிக்பாஸ் விக்ரமனிடம் கூறுகிறார்.
இதற்கு ஜனனி என்று விக்ரமன் சொல்லவே அமுதவாணன் வாதிடுகிறார். இதனால் கடுப்பான ஜனனி, அமுதவாணனை நீங்கள் எல்லாத்தும் இப்படி தான் பிரச்சினை பண்றீங்க என்று கதறி அழுகிறார். இதனுடம் இந்த புரோமோ முடிவடைகிறது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.