அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது!

0
273

பருத்தித்துறை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை கடற்படையின் தகவலின்படி, இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 497 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 66 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here