தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் முதல் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு நேற்று (11) நடைபெற்றது.
அப்போது, தேசிய மக்கள் சக்தியின் 06 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளின் 10 உறுப்பினர்களும் எதிராகவும் வாக்களித்தனர்.
அதன்படி, வரவு செலவுத் திட்டம் 4 வாக்குகளால் பெரும்பான்மையாக தோற்கடிக்கப்பட்டது.
