தேர்தல் உத்தியோகத்தர்களுக்கு இன்று ஒத்திகை

Date:

பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் அனைத்து எழுது பொருட்களும் இன்றைய (13) நாள் முழுவதும் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இந்த நடவடிக்கைகள் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

நாளை இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக 13,314 வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்பட வேண்டிய அனைத்து அலுவலர்கள் மற்றும் வாக்குப்பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் மற்றும் அனைத்து எழுது பொருட்களும் இன்று நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 49 வளாகங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

22 தொகுதிகளுடன் தொடர்புடைய 25 மாவட்டச் செயலகங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்று காலை 7 மணி முதல் பணிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பணிபுரியும் ஊழியர்களுக்காக ஒத்திகை ஒன்றும் நடத்தப்படும்.

பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் சுமார் 64,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இம்முறை தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக சுமார் 6000 பிரதிநிதிகள் அடங்கிய குழுவை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...