ரத்மலானையில் சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி

0
287

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று ரத்மலானை பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபச்சார விடுதியை நிர்வகித்த சந்தேகநபர் ஒருவரும், நிர்வாகத்திற்கு உதவிய 6 சந்தேக நபர்களும் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், இவர்கள் மேகத்தன்ன, மெதினிஓயா, காலி, திகன, ஹபரன்னாவல, இரத்மலானை மற்றும் நுகேகொட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here