யார் யார் தேசிய பட்டியலில் வரலாம்

Date:

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது கட்சி அல்லது சுயேச்சைக் குழுவினால் தேசியப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர்கள் அல்லது பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்களை மாத்திரமே நியமிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு.“29 தேசியப்பட்டியல் எம்.பி பதவிகள் தொடர்பாக கட்சியின் செயலாளர்களுக்கு அறிவித்து, நியமிக்கப்பட்ட தேசியப்பட்டியல் எம்.பி பதவிகளுக்கு வேட்புமனுக்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்டோம்.

இதன்படி கட்சியின் செயலாளர் அல்லது சுயேச்சைக் குழுவின் தலைவர் தேசியப்பட்டியலில் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள வேட்புமனுவில் உள்ள பெயர்களில் இருந்து உரிய எண்ணிக்கையை தெரிவு செய்து அனுப்ப முடியும்.

அல்லது இந்தத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒருவருக்குக் கூட கட்சியின் செயலாளர் தேசியப் பட்டியல் எம்.பி பதவியை வழங்கலாம்.

தேசியப் பட்டியலிலும், பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான தொகுதியின் வேட்புமனுவிலும் ஒரு பெயரைத் தவிர வேறு எந்தப் பெயரையும் வர்த்தமானியில் வெளியிட முடியாது.

நேற்று (நவம்பர் 16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...