வடக்கு மீனவர் கடலில் வீழ்ந்து அதிஸ்டவசமாக உயிர் தப்பித்தார்! – வீடியோ இணைப்பு

Date:

இந்திய ரோலர் படகு மோதி இலங்கை மீனவரின் மீன்பிடி வலைக்கு சேதம் ஏற்பட்டது.

இன்று அதிகாலை 2 மணியளவில் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கை, வல்வைட்டித்துறை கரையில் இருந்து 4 கடல் மைல் தூரத்தில் நூற்றுக் கணக்கான இந்திய இழுவைப் படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தது.

இதன் போதே வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி மீன்பிடி சங்கத்தைச் சேர்ந்த எஸ்.விஜயராஜா என்பருக்குச் சொந்தமான படகினை இந்திய றோளர் படகு மோதி உடைத்து நாசம் செய்துள்ளது.

இதன் போது மீனவர் கடலில் வீ்ந்து அதிஸ்டவசமாக உயிர் தப்பித்துள்ளார்.

மீனவரது 4 இலட்சம் பெறுமதியான வலைகள் அறுத்து நாசம் செய்யப்பட்டுள்ளதாக மீனவர் கவலை வெளியிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாரின், பிரதமர் மோடிக்கும் பாதிக்கப்பட்ட மீனவர் உருக்கமான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளனர்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள் எமது வாழ்வாதாரத்தை் மேலும் பாதிப்படைய செய்ய வேண்டாம். எம்மை உயிரோடு வாழவிடுங்கள். இந்திய தமிழ் உறவுகளே! 2021 ம் ஆண்டும் இதே காலத்தில் எனக்கு வலைகள் அறுக்கப்பட்டு நாசமாக்கப்பட்டது. இதற்கு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்ததால் எனக்கு ஒரு கட்சியினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே! எங்களுது வாழ்வாதாரத்தை பாதுகாக்க இந்திய மீனவர்களது இழுவைப் படகுகளின் அத்துமீறலை தடுத்து நிறுத்துங்கள் என்று குறித்த மீனவர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரத்மலானையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு

ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை...

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான...