பாலியல் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டாளரான பெண்ணுக்கு எதிராக கல்முனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.
வழக்கில் அவருக்கு சாதகமான மேலதிக அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கும், வாரம் ஒரு முறை பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்திடுவது தொடர்பான நீதிமன்ற கட்டளையை மாதத்திற்கு ஒரு முறை என நீடிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறி உப பொலிஸ் பரிசோதகரால் பாலியல் இலஞ்சம் கோரப்பட்டுள்ளது.
இதற்கமைய, பாலியல் இலஞ்சம் கோர முற்பட்ட போது, உப பொலிஸ் பரிசோதகரை கல்முனையிலுள்ள ஹோட்டலொன்றில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்ததாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் தெரிவித்தனர்.
சந்தேகநபரை சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.