மாவீரர் வாரம் – சர்வதேச நீதியை கோரி லண்டனில் திறண்ட தமிழர்கள் 

Date:

மாவீரர் வாரத்தை முன்னிட்டு  தேசியக் கொடி நாள் லண்டினில் (trafalgar square) ஆயிரக்கணக்கானோரின் பங்குபற்றுதலுடன் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்றது.

புலம்பெயர் தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டு தமது நாடுகளில் தேசிய கொடிநாள் நிகழ்வை அனுஷ்டித்து வருகின்றனர்.

இந்த தினத்தில் இறுதி யுத்தம் மற்றும் போர் காலத்தில் இலங்கையில் உயிர்த்த தமிழ் மக்களையும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

அதன் பிரகாரம் இம்முறையும் தேசிய கொடி நாள் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை
லண்டனில் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட தமிழ் மக்கள் இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் நீதியான விசாரணை அவசியம் என வலியுறுத்தியதுடன், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதி சர்வதேச தலையீட்டுடன் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இலங்கையில் அமையப்பெற்றுள்ள புதிய அரசாங்கத்துத்துக்கு ஐ.நா., மேற்கத்திய நாடுகள் உட்பட மனித உரிமைகளை நேசிக்கும் அனைத்து நாடுகளும் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்குவதற்கான அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்றும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட புலம்பெயர் தமிழர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, யுத்தத்தின் உயிர்த்த உறவுகள் மற்றும் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இவ்வாரம் முழுவதும் லண்டனின் பல்வேறு பகுதிகளிலும் ஐரோப்பா, கனடா உட்பட பல புலம்பெயர் நாடுகளிலும் புலம்பெயர் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்...

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...

இலங்கை சுங்கத்துறை வசூல் சாதனை

இலங்கை சுங்கத்துறை நேற்று (06) ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு...

குடு விற்பனை செய்யும் NPP அரசாங்க தரப்பு

நாட்டில் போதைப்பொருள் தொற்றுநோயை ஒழிக்க அரசாங்கம் கட்சி சார்பற்ற முறையில் செயல்படுவதை...